சேலம் அரசு மருத்துவமனையில் மூளையில் இருந்த கருப்பு பூஞ்சை அகற்றி சாதனை

சேலம் அரசு மருத்துவமனையில் மூளையில் இருந்த கருப்பு பூஞ்சை அகற்றி சாதனை
X

சிகிச்சையில் இருந்து முழுமையாக குணமடைந்த பழனிவேல்.

மூளையில் இருந்த கருப்பு பூஞ்சைத் தொற்றை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றி, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் வால்கரடு கிராமத்தை சேர்ந்த பழனிவேல். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர் ஒரு மாதம் கழித்து தலைவலி மற்றும் மூக்கு அடைப்பு ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

அப்போது அவருக்கு பரிசோதனை மேற்கொண்டபோது மூக்குப் பகுதி மற்றும் மூளை பகுதியிலும் கருப்பு பூஞ்சை தொற்று பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பழனிவேலுக்கு உடனடியாக கருப்பு பூஞ்சை எதிர்உயிரி மருந்து செலுத்தப்பட்டது.

பின்னர், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறை தலைவர் சங்கர் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர், நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கருப்பு பூஞ்சை தொற்றினை அகற்றினர்.இதைதொடர்ந்து, கருப்பு பூஞ்சைக்கு எதிரான எதிர்உயிரி மருந்துகள் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்துகள் அளிக்கப்பட்டு வந்ததால் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார். சேலம் மருத்துவர்களின் சாதனைக்கு, சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி, அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

Tags

Next Story
ai solutions for small business