சேலத்தில் எம்.ஜி.ஆர் சிலை சேதம்: அதிமுகவினர் போராட்டம்

சேலத்தில் எம்.ஜி.ஆர் சிலை சேதம்: அதிமுகவினர் போராட்டம்
X

சேதமடைந்த எம்.ஜி.ஆர் சிலை.

எம்.ஜி.ஆர் சிலை மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சிலையின் கை உடைந்து சேதமடைந்தது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா சிக்னலில் முன்னால் முதல்வர்கள் காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று அதிகாலை ரவுண்டானா வழியாக சேலம் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் எம்.ஜி.ஆர் சிலை பீடத்தின் மீது உள்ள ஏணி மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு வாகனத்தை நிற்காமல் சென்று விட்டனர். இதில் எம்ஜிஆர் சிலையின் வலது கை மற்றும் பீடம், ஏணி சேதமாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த அதிமுகவினர் சம்பவ இடத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆத்தூர் நகர போலீசார் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தி விட்டு தப்பியோடிய அடையாளம் தெரியாத வாகனத்தை சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவை வைத்து கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து அதிமுகவினர் கலைந்து சென்றனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!