கடன் வாங்கி மன வளர்ச்சி குன்றிய மகனுக்கு மருத்துவம்; கடும் சிரமத்தில் பெற்றோர்
மனவளர்ச்சி குன்றிய கருப்பசாமியுடன் அவரது தாயார் அஞ்சுகம்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட முல்லைவாடி கலைஞர் காலனியில் வசித்து வரும் இந்திரன் அஞ்சுகம் தம்பதியருக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் மனவளர்ச்சி குன்றிய கருப்பசாமிக்கு பல்வேறு மருத்துவமனைகளில் கடன் வாங்கி மருத்துவம் செய்து வருகின்றனர்.
ஆனால் இந்திரன் ஹோட்டலில் கூலி வேலைக்கு சென்று தன் குடும்பத்தை கவனிக்க வேண்டிய நிலையில் சொந்த வீடு இல்லாததால், வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். வருமை நிலையிலும் தன் மகனுக்கு மாதந்தோறும் மருத்துவ செலவுகள் பார்ப்பதில் இந்திரன் மிகவும் சிரமப்பட்டு வருகின்றார்.
மேலும் இவர்கள் இலவச குடியிருக்க வீடு மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட தன் மகனுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். சேலம் மாவட்ட ஆட்சியர், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடமும் பல முறை மனு கொடுத்தும் இது வரை அரசு சார்பில் எந்த உதவியும் செய்யவில்லை.
இதனால் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் எங்களின் குடும்ப வறுமை நிலையை அறிந்து மன வளர்ச்சி குன்றிய எனது மகன் கருப்பசாமிக்கு மருத்துவ உதவிகளும், இலவச குடியிருப்பு வீடு வழங்க வேண்டும் என்று அவரது தாய் அஞ்சுகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu