ஏற்காட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

ஏற்காட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது
X

கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட மூவர்.

ஏற்காட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில், குண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிந்துகாடு மலைகிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஏற்காடு காவல்நிலைய போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ராமசாமி என்பவரது மகன்கள் பழனிசாமி, கண்ணன் மற்றும் செல்லத்துரை ஆகிய மூவரும் கள்ளச்சாராயம் காச்சி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த சாராய பாக்கெட்டுகள், ஊறல் போடுவதற்காக பதுக்கி வைத்திருந்த பனை வெல்லம் மற்றும் இதர பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
ai based healthcare startups in india