எடப்பாடி பழனிச்சாமி போல் கூவத்தூர் போய் ஆட்சியை பிடிக்கவில்லை - உதயநிதி ஸ்டாலின்

எடப்பாடி பழனிச்சாமி போல் கூவத்தூர் போய் ஆட்சியை பிடிக்கவில்லை - உதயநிதி ஸ்டாலின்
X

சேலத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்.

எடப்பாடி பழனிச்சாமி போல் கூவத்தூர் போய் ஆட்சியை பிடிக்க வில்லை என சேலத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

எடப்பாடி பழனிச்சாமி போல் கூவத்தூர் போய் ஆட்சியை பிடிக்கவில்லை என சேலத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

சேலம் மாவட்டம் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக, இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஆத்தூர் ராணிப்பேட்டையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், சேலம் மக்களை நம்ப முடியாது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதியில் திமுக வை வெற்றி பெற செய்தீர்களா? ஏமாற்றி விட்டீர்கள் என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலாவது வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.

அதிமுக ஆட்சியில் ஒரு கோடி கொரோனா தடுப்பூசி மட்டும் போடப்பட்டது, போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்றும், திமுக ஆட்சி அமைந்த 9 மாத காலத்தில் 10 கோடி தடுப்பூசி போடப்பட்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், அதிமுக, ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் வைத்து விட்டு சென்றுள்ளனர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களாக சொல்கிறார் ஆட்சி கலைந்து விடுமென. அவர் போல கூவத்தூர் போய் ஆட்சியை பிடிக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி என்றார்.

எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின் போது, உதயநிதி ஸ்டாலின் காணவில்லையென சொல்லும் அவர், டேபிளுக்கு கீழே தேட வேண்டாம், மேலே தேடினால் இருப்பேன் என சாடினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!