சேலத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கணவன் மனைவிக்கு ஆயுள்

சேலத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கணவன் மனைவிக்கு ஆயுள்
X

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராமசந்திரன் மற்றும் செல்வி.

சேலத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கணவன் மனைவிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கீழ்த்தோம்பை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து குடும்பம் நடத்தி உள்ளார்.

இதையடுத்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் மல்லியகரை காவல்நிலைய போலீசார் மணிகண்டன் மற்றும் அவரது தந்தை ராமசந்திரன், தாய் செல்வி ஆகிய மூன்று பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணையானது சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதனிடையே மணிகண்டன் இறந்து விட்ட நிலையில் அவரின் பெற்றோர் ராமசந்திரன் மற்றும் செல்வி ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனையும் தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!