சேலம் ஆத்தூர் அருகே கூலமேட்டில் அரசு விதிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு

சேலம் ஆத்தூர் அருகே  கூலமேட்டில் அரசு விதிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு
X

ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை வீரர்கள் அடக்கினர்.

சேலம் ஆத்தூர் அருகே கூலமேட்டில் அரசு விதிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேடு ஜல்லிக்கட்டு போட்டி பிரசித்தி பெற்றது. இந்த கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக காணும் பொங்கலுக்கு அடுத்தநாள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதை தொடர்ந்து இந்தாண்டு அரசு விதித்த கொரோனா கட்டுப்பாடுகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் இரண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும், கொரோனா பரிசோதனை செய்து கொண்ட 300 மாடுவிடி வீரர்கள் மற்றும் உள்ளூர் மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 620 காளைகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் முதலில் கோயில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் கால்நடை மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது.

முதல் சுற்றில் 75 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு வெள்ளி பொருட்கள், சில்வர் பாத்திரங்கள், குத்து விளக்கு போன்ற பொருட்களை பரிசாக வழங்கினர். அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கு விழாக்குழு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பதிவு செய்யப்பட்ட 620 காளைகளில் முதல் சுற்றில் 90 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாடிவாசலில் சீறீப்பாயந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனிடையே மாடுபிடி வீரர் ஒருவர் ஜல்லிக்கட்டு விழாக்குழு பணியன் அணியாமல் காளையை அடக்கியதால் அவரை மாட்டின் உரிமையாளர் சராமாரி தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்ததால் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story