/* */

ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம்

ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 17,500 பருத்தி மூட்டைகள் 5 கோடியே 50 லட்சத்திற்கு விற்பனை.

HIGHLIGHTS

ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம்
X
ஏலத்திற்கு கொண்டுவரப்பட்ட பருத்தி மூட்டைகள்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் செயல்பட்டு வரும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இச்சங்கத்திற்கு ஆத்தூர் மட்டுமின்றி கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திட்டக்குடி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வருகிறார்கள். இங்கு கொண்டு வரப்படும் பருத்தி மூட்டைகளை திருப்பூர், தேனி, காங்கேயம், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பருத்தி வியாபாரிகள் இங்கு வந்து மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தி மூட்டைகளை கொள்முதல் செய்து செல்கிறார்கள்.

இந்நிலையில் ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கொண்டு வந்த 17,500 பருத்தி மூட்டைகள் சுமார் 5 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் பி.டி., ரகம் பருத்தி ஒரு குவிண்டால் 5,800 முதல் 10,900 ரூபாய்க்கும், டி.சி.ஹச்., ரகம் பருத்தி ஒரு குவிண்டால் 8,200 ரூபாய் முதல் 16,089 ரூபாய்க்கும், கொட்டு பருத்தி குவிண்டால் 3,560 ரூபாய் முதல் 6,509 ரூபாய் வரை மறைமுக ஏலத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் பருத்தி மூட்டைகளை கொள்முதல் செய்தார்கள்.

இதனிடையே பருவ மழைக்காரணமாக பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் குவிண்டால் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் முதல் மூன்றாயிரம் வரை விலையேற்றம் அடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே பருத்தி ஏலத்தில் கலந்து கொள்வதற்காக வரும் விவசாயிகளுக்கு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அதிகாரிகள் அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிகாலையில் ஏலத்தில் பங்கேற்க வரும் விவசாயிகள் கடும் குளிரில் நடுங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் ஓய்வெடுப்பதற்க்கென அரங்கம் இல்லாததாலும் போதிய கழிப்பிட வசதி இல்லாததால் திறந்த வெளியிலேயே விவசாயிகள் கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட வேளாண் துறை நிர்வாகம் விவசாயிகளின் நலன் கருதி அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 11 Jan 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...