பாஜக கொடி கம்பம் நடுவதில் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு

பாஜக கொடி கம்பம் நடுவதில் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.

கொடிக்கம்பம் நடுவதில் பாஜகவினருக்கும், போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜலகண்டாபுரம் அறிஞர் அண்ணா சிறுவர் பூங்கா அருகில் இருந்த பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கம்பத்தை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஒரு வாரத்திற்கு முன்பு ஜலகண்டாபுரம் பேரூராட்சி நிர்வாகம் ஜேசிபி எந்திரம் கொண்டு அகற்றியதாக்க கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், திமுக அரசை எதிர்த்தும் ஜலகண்டாபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுதிர்முருகன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பாஜகவினர் 100க்கும் மேற்பட்டோர் அறிஞர் அண்ணா சிறுவர் பூங்கா அருகே கொடிக்கம்பத்தை நடுவதற்கு முயன்றனர். அதை ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா தலைமையிலான போலீசார் தடுக்க முயன்றனர். தடுப்பையும் மீறி பாஜகவினர் கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றினர்.

இதனால் அப்பகுதியில் போலீசார் மற்றும் பாஜக இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அங்கு அதிரடி படையுடன் வந்த சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ் பாஜகவின் கொடிக்கம்பத்தை அகற்றி அங்கிருந்த 100க்கும் மேற்பட்ட பாஜகவினரை கைது செய்தனர்.

Tags

Next Story
ai marketing future