ஆத்தூர் : ஐஜேகே தலைவர் இளையவேந்தர் பிறந்த நாளை கொடியேற்றி கொண்டாட்டம்

ஆத்தூர் : ஐஜேகே தலைவர் இளையவேந்தர்  பிறந்த நாளை கொடியேற்றி கொண்டாட்டம்
X
ஆத்தூர் அருகே சீலியம்பட்டியில் ஐஜேகே தலைவர் இளைய வேந்தர் பிறந்த நாளையொட்டி கொடியேற்றி கொண்டாட்டம்.

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் இளைய வேந்தர் பிறந்தநாள் விழாவை இந்திய ஜனநாயகட்சியினரும் பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தினரும் இன்று தமிழகம் முழுவதும் கட்சியின் கொடியேற்றி இனிப்புகள் வழங்கியும் ஏழை எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகளும் வழங்கினர்.

இதன் ஒரு பகுதியாக சேலம் புறநகர் மாவட்டம் ஆத்தூரை அடுத்த சீலியம்பட்டி கிராமத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் இளைய வேந்தர் பிறந்தநாள் விழா சேலம் புறநகர் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து கட்சியின் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர். பின்னர் சீலியம்பட்டி ஊராட்சியில் உள்ள துப்புரவ தூய்மை பணியாளர்கள், டேங்க் ஆட்ரேட்டர்கள் மற்றும் அப்பகுதியிலுள்ள முதியோர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு 5 கிலோ அரிசி தொகுப்பினை வழங்கினர்.

Tags

Next Story
ai in future agriculture