/* */

சேலம்: ஆத்தூர் அருகே டூவீலரில் சாராயம் கடத்திய இருவர் கைது

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

சேலம்: ஆத்தூர் அருகே டூவீலரில்  சாராயம் கடத்திய இருவர் கைது
X

ஆத்தூர் தென்னங்குடிபாளையம் அருகே லாரி டியூப் மூலம் சாராயம் கடத்தி வந்த பழனி, ரவி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் கல்வராயன்மலை வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு அங்கிருங்து, லாரி டியூப்களில் கடத்தி வரப்பட்டு, ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்ந்து புகார் சென்றது. அதன் பேரில், போலீசார் தனிப்படை அமைத்து கல்வராயன்மலை வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சாராயம் காய்ச்சுவதை தடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடிபாளையம் வடக்கு அம்மன் நகர் பகுதியில், ஊரக போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் நிற்காமல் சென்றுள்ளனர்.

பின்னர், அவர்களை துரத்தி சென்று பிடித்த போலீசார், இருசக்கர வாகனத்தை பரிசோதனை செய்தபோது , கல்வராயன்மலை பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் மூன்று லாரி டியூப்கள் மூலம் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கருமந்துறை பகுதியை சேர்ந்த பழனி மற்றும் ரவியை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 120 லிட்டர் சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 9 July 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்