ஆத்தூர் அருகே குளத்தில் தவறி விழுந்த லாரி டிரைவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஆத்தூர் அருகே குளத்தில் தவறி விழுந்த லாரி டிரைவர்  நீரில் மூழ்கி உயிரிழப்பு
X

பைல் படம்.

ஆத்தூர் அருகே குளத்தில் தவறி விழுந்த லாரி டிரைவர் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கல்லாநத்தம் வடக்குத் தெருவைச் சேர்ந்த பெரியசாமி இவரது மகன் தங்கராஜ் (57) இவருக்கு மயில் என்ற மனைவியும் அழகேசன், கணேசன் என்ற மகனும், சுமதி என்ற மகளும் உள்ளனர்.

இவர்களுக்கு திருமணமாகி தனிக்குடித்தனம் இருந்துவரும் நிலையில், தங்கராஜ் லாரி டிரைவராக வெளியூரில் தங்கி லாரி ஓட்டிவந்துள்ளார் .

இவருக்கு கடந்த ஆறு மாத காலமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், வேலைக்கு செல்லமுடியாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு கல்லாநத்தம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஊர் குளத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவர் நீரில் மூழ்கி இறந்த நிலையில் சடலமாக மிதப்பதை கண்டு அப்பகுதி மக்கள் இன்று ஆத்தூர் ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் தங்கராஜின் உடலை கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!