/* */

தலைவாசல் கால்நடை பூங்கா 22ஆம் தேதி திறப்பு

சேலம் மாவட்டம் தலைவாசலில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவை வரும் 22ஆம் தேதி தமிழக முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.

HIGHLIGHTS

தலைவாசல் கால்நடை பூங்கா 22ஆம் தேதி திறப்பு
X

சேலம் மாவட்டம் தலைவாசலில் 1100 ஏக்கர் பரப்பளவில் 1022 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா அமைக்க கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன. முதல்கட்டமாக கால்நடை மருத்துவ கல்லூரியின் கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. இந்த நிலையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று கட்டுமான பணிகளை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் ஐந்தாவது கால்நடை மருத்துவக் கல்லூரியாக 118 கோடியில் தலைவாசலில் கட்டப்பட்டுள்ளதாகவும், இதனை வருகிற 22-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் நேரில் திறந்து வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இந்திய சரித்திரத்தில் முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு ஒரே ஆண்டில் சர்வதேச தரத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு திறப்புவிழா காண்பது என்பது தமிழகத்தில் தான் என அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி என்றும், விவசாயி முதல்வர் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். சாமானியனும், முதலமைச்சரை எளிதாக சந்தித்து மனு அளிக்கலாம்.

முதலமைச்சரின் நடவடிக்கைளை பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவினர் வேண்டுமென்றே குறை கூறி வருகின்றனர். மேலும் விவசாயிகள் கால்நடைகளுக்கு பிரச்சனை என்றால் 1962 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் உடனே வந்து சிகிச்சை அளிப்பார்கள். அனைத்து கால்நடை மருத்துவ மனைகளிலும் உரிய வசதி செய்யப்பட்டிருக்கிறது.

மற்றும் கோழி இனங்கள் ஆராய்ச்சி செய்ய பல்லடத்தில் ரூபாய் 15 கோடி மதிப்பில் ஆராய்ச்சி மையம் முதலமைச்சர் உருவாக்கித் தந்துள்ளார் எனவும் பேசினார். மேலும் தீவனங்கள் பிரச்சினையால் நோய் தாக்குதல் ஏற்பட்டால் ஆராய்ச்சி செய்யும் வசதி இங்கு உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தஞ்சை உள்ளிட்ட அந்தந்த மாவட்டங்களில் கால்நடை தீவனங்கள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Updated On: 18 Feb 2021 7:00 AM GMT

Related News