11 தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர்கள் நியமனம்

11 தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர்கள் நியமனம்
X
சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்திலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு வகையான குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளரை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளராக சகேட் பிரகாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவர், அஸ்தம்பட்டி சாரதா கல்லூரி சாலையில் உள்ள பொதுப்பணித்துறை கூடுதல் சுற்றுலா மாளிகை அறை எண். 3-ல் தங்கி உள்ளார். இவரை பொதுமக்கள், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை நேரில் சந்திக்கலாம். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் காவல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள சகேட் பிரகாஷ் பாண்டே, தேர்தல் தொடர்பாக அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!