சேலத்தில் இதுவரை 68 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்

சேலத்தில் இதுவரை 68 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்
X
தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சேலத்தில் இதுவரை 68 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்

தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சேலம் மாநகராட்சியில் (60 வார்டுகள்) இன்று வரை மொத்தம் 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஆறு நகராட்சிகளில் (165. வார்டுகள்) இன்று வரை மொத்தம் 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோல் 31 பேரூராட்சிகள் (474 வார்டுகள்) இன்று வரை மொத்தம் 42 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சி, பேரூராட்சி நகராட்சிகளில் இதுவரை 68 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!