சேலத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு 288 நுண் பார்வையாளர்கள்
![சேலத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு 288 நுண் பார்வையாளர்கள் சேலத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு 288 நுண் பார்வையாளர்கள்](https://www.nativenews.in/h-upload/2021/03/31/1000101-img-20210317-wa0056.webp)
பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரிய வேண்டிய தேர்தல் நுண்பார்வையாளர்கள் தேர்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 4,280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 238 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதில் பணிபுரியக்கூடிய 288 தேர்தல் நுண்பார்வையாளர்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
அதன்படி கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் பதற்றமான 11 வாக்குச்சாவடிகளுக்கு 13 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆத்தூர் தொகுதியில் பதற்றமான 13 வாக்குச்சாவடிகளுக்கு 16 தேர்தல் நுண்பார்வையாளர்களும், ஏற்காடு தொகுதியில் பதற்றமான 28 வாக்குச்சாவடிகளுக்கு 34 நுண்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஓமலூரில் 18 வாக்குச்சாவடிகளுக்கு 22 பேரும், மேட்டூரில் பதற்றமான 34 வாக்குச்சாவடிகளுக்கு 41 பேரும், எடப்பாடியில் பதற்றமான 14 வாக்குச்சாவடிகளுக்கு 17 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சங்ககிரி தொகுதியில் பதற்றமான 8 வாக்குச்சாவடிகளுக்கு 10 தேர்தல் நுண்பார்வையாளர்களும், சேலம் மேற்கு தொகுதியில் பதற்றமான 43 வாக்குச்சாவடிகளுக்கு 52 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதே போன்று சேலம் வடக்கு தொகுதியில் பதற்றமான 19 வாக்குச்சாவடிகளுக்கு 23 பேரும், சேலம் தெற்கு தொகுதியில் பதற்றமான 19 வாக்குச்சாவடிகளுக்கு 23 பேரும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் பதற்றமான 31 வாக்குச்சாவடிகளுக்கு 37 பேரும் என மொத்தம் 288 தேர்தல் நுண்பார்வையாளர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu