அபராதம் கட்டாத 80 ஆயிரம் டூவீலர்கள்
சேலத்தில் கடந்த ஆண்டு ஹெல்மெட் அணியாமல் சென்ற 80 ஆயிரம் பேர் அபராதம் கட்டவில்லை.
சேலம் மாநகரில் ஸ்பாட் பைன் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. அவ்வாறு வசூல் செய்யும் பணத்தில் பெரும் மோசடி நடந்ததை தொடர்ந்து சம்பவ இடத்திலேயே அபராத தொகை பெறுவதில்லை. அதற்கு பதில் ஹெல்மெட் அணியாமலும், அதிவேகமாக வாகனத்தை இயக்கி வந்து பிடிபட்டாலும், ஆன்லைன் மூலமாக அபராத தொகையை செலுத்த வேண்டும் என்று நடைமுறைக்கு வந்தது. கடந்த ஆண்டு முதல் இவ்வாறு சம்பவ இடத்திலேயே அபராத தொகையை வசூலிக்கவில்லை. ஆனால் யாருமே ஆன்லைன் மூலமாக அபராத தொகை செலுத்தவில்லை. கடந்த ஒரு ஆண்டு மட்டும் 80 ஆயிரம் பேர் அபராத தொகையை செலுத்தவில்லை. இதையடுத்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பதற்கு கமிஷனர் சந்தோஷ்குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,300 இருசக்கர வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது. உடனடியாக பணத்தை கட்டி விட்டு வந்து வண்டியை பெற்று செல்லலாம் என போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து பலர் உடனடியாக ஆப் மூலமாக பணத்தை செலுத்தி விட்டு வாகனங்களை பெற்றுச் சென்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu