தேர்தல் பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் போலீசார்

தேர்தல் பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் போலீசார்
X

சேலம் உள்பட 4 மாவட்டங்களில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் பேரை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6 ம் தேதி நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் பறக்கும் படையினருடன் மாவட்ட போலீசாரும் இணைந்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு தலா ஒரு கம்பெனி வீதம் துணை ராணுவம் வந்துள்ளது. சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஓய்வு பெற்ற காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஊர்காவல் படையினர், உள்ளூர் போலீசார், மாவட்ட ஆயுதப்படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், துணை ராணுவத்தினர் என 12 ஆயிரம் பேரை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் அந்தந்த மாவட்ட தேர்தல் பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சேலம் மாவட்டத்தில் 4 ஆயிரம் பேரும், தர்மபுரியில் 3 ஆயிரம் பேரும், கிருஷ்ணகிரியில் 2 ஆயிரத்து 500 பேரும், நாமக்கல்லில் 2 ஆயிரத்து 500 பேரும் என மொத்தம் 12 ஆயிரம் பேரை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் அந்தந்த மாவட்டங்களில் நடந்து வருகிறது. தேர்தல் ஆணைய உத்தரவு வந்ததும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரையும் ஈடுபடுத்துவோம் என்றனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil