சேலம் மாவட்டத்தின் புதிய கலெக்டர் கார்மேகம் ...

சேலம் மாவட்டத்தின் புதிய கலெக்டர் கார்மேகம் ...
X
சேலம் மாவட்டத்தின் 173 வது கலெக்டர்.

சேலம் மாவட்டத்தின் புதிய கலெக்டராக கார்மேகம் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்...

சேலம் உள்பட ஐந்து மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் ராமனுக்கு பதிலாக கார்மேகம் நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து சேலம் மாவட்டத்தின் 173 வது கலெக்டர் கார்மேகம் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஊரடங்கு விதிகளை கடைபிடித்து முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் என்று புதிதாக சேலம் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்ற கார்மேகம் கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!