தேர்தல் பணிகள்- போட்டாே கலைஞர்கள் அதிர்ச்சி

தேர்தல் பணிகள்- போட்டாே கலைஞர்கள் அதிர்ச்சி
X

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ளூர் வீடியோ மற்றும் போட்டோ கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீடியோ மற்றும் போட்டோ கலைஞர்கள் கோரிக்கை மனு வழங்கினர்.

கடந்த காலங்களில் நடைபெற்ற சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் இதனால் தேர்தல் நேரத்தில் அவர்கள் போதிய வருமானம் பெற்று வந்தனர். ஆனால் ஒட்டுமொத்த பணிகளையும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருப்பதால் உள்ளூர் போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் பணிகளில் உள்ளூர் போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிராபர்கள் நலச் சங்கத்தின் சார்பில் இன்று 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனுவை வழங்கினர். காலங்காலமாக உள்ளூர் வீடியோ கலைஞர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதால் செய்யும் வேலைக்கு கூலியைக் குறைத்துக் கொடுக்க வாய்ப்புள்ளதால் தங்களுக்கு நேரடியாக தேர்தல் ஆணையமே பணி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!