சேலத்தில் எப்போது சாலைகள் சீரமைக்கப்படும் ? ஆணையர் பதில்

சேலத்தில் எப்போது சாலைகள் சீரமைக்கப்படும் ? ஆணையர் பதில்
X

சேலம் மாநகர பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகள் முடிவுற்ற உடன் சம்பந்தப்பட்ட இடங்களில் சாலைகள் சீரமைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முடிவுற்ற திட்ட பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், சேலம் மாநகராட்சி பகுதியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 965 கோடி ரூபாய் மதிப்பில் 81 பணிகள் எடுத்துக்கொள்ள பட்டதாகவும், இதில் 22 பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

சேலம் மாநகர பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகள் முடிவுற்ற உடன் சம்பந்தப்பட்ட இடங்களில் சாலைகள் சீரமைக்கப்படும் என்றும், குமரகிரி ஏரியில் இருந்து வரும் நீரை சுத்திகரிக்கும் வகையில் பச்சப்பட்டி பகுதியில் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறிய ஆணையாளர் ரவிச்சந்திரன் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவையை உடனடியாக செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சி பணிக்கு உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!