ரஷ்ய அதிபர் புடின் நமது பிரதமர் மோடியை பாராட்ட காரணம் என்ன தெரியுமா?
இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின்.
Russian President Putin -ரஷ்ய அதிபர் புடின் பிரதமர் மோடியை சிறந்த தேசபக்தர், அவரது செயல்பாடுகளால் இந்தியா வளர்ந்து வருகிறது. உலகின் எதிர்காலம் இந்தியாவின் கைளில் உள்ளது என்று கூறியுள்ளார்.இது சாதாரண விஷயம் இல்லை. உலகின் ஒரு வல்லரசு நாட்டின் அதிபர் இப்படி பாராட்டி உள்ளதற்கான காரணங்களை ஆய்வு செய்யலாம்.
இந்தியாவை வீழ்த்த நினைத்த எதிரிகள் முன்பு இன்று இந்திய நாடு பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் பெரிய வல்லரசாக நிமிர்ந்து நிற்கிறது.
இந்தியா மற்றவர்கள் வீழ வேண்டும் என்ற நயவஞ்சகத்துடன் செயல்படவில்லை. ஆனால் இந்தியாவை நசுக்க நினைத்தவர்களை பொசுக்கவும் மறக்கவில்லை. உலகமே கொரானாவில் வீழ, அதை வைத்து தடுப்பூசி மூலம் அவர்கள் உழைப்பை உறிஞ்ச நினைக்கவில்லை, அதற்கு பதிலாக 70 நாடுகளுக்கு தடுப்பூசி தந்தது இந்தியா. அதுவும் 48 நாடுகளுக்கு இலவசமாக கொடுத்தது இந்தியா.
உள்நாட்டில் 40 கோடி மக்களுக்கு மூன்று வருடமாக இலவசமாக உணவுப்பொருள் கொடுத்து வருகிறது. உக்ரைன் போரால் உணவில்லாமல் உலகமே வாட, எனக்கு கோதுமை கொடு என்று மிரட்டிய அமெரிக்காவை புறந்தள்ளிவிட்டு, ஏழை நாடுகளுக்கு அதை இலவசமாக தந்தது இந்தியா. கொரானாவில் உலகமே திணறிக் கொண்டிருந்த வேளையில் நாடு பிடிக்கும் ஆசையில் உள்ளே நுழைந்த சீனாவை, பதறடித்தது இந்தியா.
சோத்துக்கே வழியில்லாத இலங்கைக்கு, உலகம் திரும்பி பார்க்காத வேளையில், சீனா உதறி தள்ளிய நாட்களில், உணவு முதல், பெட்ரோல், மருந்து வரை கொடுத்து உதவிய போதும் இலங்கை முதுகில் குத்தியது. இதனால் இலங்கைக்கு அசைக்க முடியாத ஆப்பு அடித்தது மத்திய அரசு.
உலகமெல்லாம் இருக்கும் முதலீடுகளை மூடிக்கொண்டிருக்கும் வேளையில், 1.45 லட்சம் கோடி ரூபாயில் சிப் உற்பத்திக்கு அடிக்கல் நாட்டியுள்ளது இந்தியா. ஏர்பஸ் உடன் டாட்டா மூலம் கொண்ட புரிந்துணர்விற்கு பிறகு 29,000 கோடியில் போர் விமான உற்பத்திக்கு குஜராத்தில் அடிக்கல் நாட்டி உள்ளார் பிரதமர் மோடி.
ரஃபேல் விமானம் என்ன, அதன் இறக்கை கூட வாங்க காசில்லை என்று முந்தைய ஆட்சியாளர்கள் சொன்ன நிலையில், 36 போர் விமானங்களை ஆயுதத்தோடு வாங்கியது மத்திய அரசு. அடுத்து 140 விமானங்களுக்கு ஆர்டர் கொடுக்கவும் பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன.
தடையில் இருக்கும் ரஷ்யாவிடம் S-400 வாங்கி நாட்டின் வான் பாதுகாப்பை உறுதி செய்தது மத்திய அரசு.150க்கும் மேற்பட்ட ராணுவ பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்து சொந்தமாக தயாரித்து வருகிறோம். உலக நாடுகளிடம் 'உன்னிடம் நாங்கள் பொருட்கள் வாங்குகிறோம், ஆனால் உற்பத்தியை எங்கள் நாட்டில் செய்ய வேண்டும் என உலக கார்ப்பரேட்டுகளுக்கு செக் வைத்தது இந்திய அரசு.
புல்லட் ரயில் முதல் விரைவு சாலைகள் மூலம் வருங்கால வசந்தத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. கங்கையில் இன்று கப்பல் போக்குவரத்து தொடங்கி உள்ளது. 1.6 லட்சம் கோடிக்கு செல்ஃபோன்களை இறக்குமதி செய்து வந்த இந்தியா 1.2 பில்லியன் டாலருக்கு ஒரு கம்பெனி மூலம் மட்டுமே அதே செல்போன்களை ஏற்றுமதி செய்துள்ளது. இருபது வருடங்களாக கட்ட முடியாமல் நிறுத்தி வைத்த விமானந்தாங்கி போர்க் கப்பலை கட்டி முடித்துள்ளது.
தேஜாஸ் வகை விமானங்களை தயாரிக்க வல்லரசுகள் முட்டுக்கட்டை போட்டன. அதனை தாண்டி தேஜாஸ் விமானங்களை சொந்தமாக தயாரித்தது இந்தியா. அதன் மூலம் 146 விமானங்களை இந்திய ராணுவத்திற்கு வாங்க ஒப்பந்தம் போட்டது மத்திய அரசு. தற்போது உலகத்தில் 14 நாடுகள் அந்த தேஜாஸ் விமானத்தை வாங்க காத்திருக்கிறன்றன.
உலகமே விண்ணிற்கு செல்ல வழி ஸ்ரீஹரிகோட்டா தான் என்று உலகத்தின் செயற்கை கோள்களுக்கு உதவி செய்து, ஒரே நேரத்தில் 36 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியது இந்தியா.
கோடு போடுவதற்கே வசதியில்லை என்று சொன்ன காலம் போய், இன்று மூளை முடுக்கெல்லாம் ரோடு போட்டுள்ளோம். மின்சாரம் இல்லாத 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. காலையில் ரோடுகள் கழிப்பிடமாக மாறிய காலம் போய் வீடுதோறும் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.
அரசு கொடுக்கும் ₹1 இல் 16 பைசா மட்டுமே மக்களுக்கு போகிறது என்று புலம்பாமல், 40 கோடி புதிய வங்கி கணக்குகள் மூலம் சேதாரம் இல்லாமல் மக்கள் நலத்திட்டங்களை கொண்டு சேர்த்துள்ளது மத்திய அரசு.
ஜி.எஸ்.டி. மூலம் வரி ஏய்ப்புகளை குறைத்தது மட்டுமில்லாமல் மாநிலங்களுக்கு இடையே இருந்த ஊழல்களின் ஊற்றுக்கண்ணான செக்போஸ்டகளை முற்றிலும் ஒழித்துள்ளது.
காசு கொடுத்தாலே சிலிண்டர் கிடைக்காது என்ற நிலையை மாற்றி 18 கோடி வீடுகளுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு மூன்று மாத இடைவெளியில் முதலீடு செய்ய ரூ.2000 வழங்கி வருகிறது.
ஒவ்வொரு துறைமுகத்தையும் ரோடுகள், ரயில்வே மூலம் இணைத்து, எதிர்கால தொழில் முதலீட்டுக்கு சாகர்மாலா என்ற திட்டத்தினால் புரட்சிக்கு வித்திட்டது மத்திய அரசு. புல்மாவில் எல்லை புகுந்து தாக்கியவர்களை வீடு புகுந்து கொன்று குவித்தது இந்திய விமானப்படை.
காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவினை நீக்கி, அங்கு முறையான பல விஷயங்கள் நடந்து வருகின்றன. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம் என்று சொன்ன மலேசியாவை சுளுக்கெடுத்து அந்நாட்டு பிரதமரை வீட்டுக்கு மூட்டை கட்டி அனுப்பியது இந்தியா.
பாகிஸ்தானுக்கு தீவிரவாதம் வளர்க்க நிதி தந்த சவூதி, ஓபெக் நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அதை நிறுத்தியது நம்நாடு. ராமருக்குஅயோத்தியில் மட்டுமல்ல சவூதி அரேபியாவிலும் கோயில் கட்டப்பட்டுள்ளது. பாரதத்தின் மக்கள் தொகையோ 140 கோடி, அவர்களில் 40 கோடி பேர் வீட்டில் கொரானாவால் முடங்கியபோது மூன்று வருடமாக தொடர்ந்து இலவச உணவு தானியங்களை வழங்கி வருகிறது.
கோதாவரி- காவிரி இணைப்பிற்கு 88,000 கோடிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை எத்தனை? எப்படி நடந்தது? ரேசன் கடையில் திருட்டு வழியில் சம்பாதித்த போலி கார்டுகள் அழிக்கப்பட்டது. அரசு கொடுத்த மானிய சிலிண்டர்களை வைத்து வியாபாரம் செய்தவர்கள் சிக்கி உள்ளனர். விவசாயிகளுக்கு கொடுத்த உர தட்டுப்பாட்டிற்கு ஒரே சிறு வழியில் நடந்து வந்த கோடிக்கணக்கான திருட்டு தடுக்கப்பட்டது.
இந்திய காசையே பிரிண்ட் செய்து இந்தியாவிற்கு எதிராக தீவிரவாதிகளுக்கு பணம் கொடுத்த பாகிஸ்தானிற்கு பண மதிப்பிழப்பால் அதன் மதிப்பை இழக்க வைத்தது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இது போன்ற பல காரணங்களை அடுக்கலாம். இதனால் தான் புடின் பிரதமர் மோடியை பாராட்டி உள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu