வெளிநாட்டு பயணிகளுக்கு ஆா்டி பிசிஆா் பரிசோதனை இன்று முதல் கட்டாயம்

வெளிநாட்டு பயணிகளுக்கு ஆா்டி பிசிஆா் பரிசோதனை இன்று முதல் கட்டாயம்
X

சென்னை விமான நிலையம் 

ஆா்டி பிசிஆா் பரிசோதனைக்கு சுய ஒப்புதல் அளிக்கும் முறையை விமான போக்குவரத்து துறை அமைச்சகம் இன்று அதிகாலை முதல் கட்டாயமாக்கியுள்ளது

ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்பிற்குள்ளான "அதிக ஆபத்துள்ள" நாடுகளிலிருந்து சென்னை உள்ளிட்ட 6 பெருநகரங்களுக்கு வரும் சா்வதேச விமான பயணிகள்,முன்னதாகவே இணையதளம் மூலம் ஆா்டி பிசிஆா் பரிசோதனைக்கு சுய ஒப்புதல் அளிக்கும் முறையைமத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் இன்று அதிகாலை முதல் கட்டாயமாக்கியுள்ளது.

கொரோனா ஒமிக்ரான் வைரஸ் அதிகம் பாதித்த "அதிக ஆபத்துள்ள" நாடுகளான தென் ஆப்பிரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல், உட்பட 12 நாடுகளிலிருந்து வரும், சர்வதேச பயணிகளுக்கு விமான நிலையத்தில் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

பரிசோதனை முடிவுகள் வரும் வரை, விமான நிலையத்தில் காத்திருந்து அதன் பின், தங்களது வீடுகளுக்கு செல்ல வேண்டும். அங்கேயும், அவர்கள் ஏழு நாட்கள் தனிமையில் இருந்து, எட்டாவது நாள் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை ஏற்கனவே சென்னை விமானநிலையத்தில் இம்மாதம் டிசம்பா் ஒன்றாம் தேதியிலிருந்து அமுலில் உள்ளது.

இந்நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தற்போது ஒமிக்ரான் பாதித்த நாடுகளிலிருந்து வரும் பயணியர் விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.அதற்காக பயணிகள்,அவா்கள் வந்து இறங்க வேண்டிய இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே Airsuvidha இணையதளத்தில் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது.

அவ்வாறு இணையதளத்தில் சுய ஒப்புதல் விண்ணப்பம் செய்யும்போது,அவா்கள் இந்த பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக 14 நாட்களில் எந்தெந்த நாடுகளுக்கு சென்றுள்ளனா் என்பதையும் குறிப்பிட வேண்டும். முதல்கட்டமாக சென்னை, பெங்களூா், ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை,டில்லி ஆகிய 6 சா்வதேச விமானநிலையங்களில் இது அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கட்டாய முன்பதிவு நடைமுறை சென்னை உள்ளிட்ட 6 சா்வதேச விமானநிலையங்களில் இன்று அதிகாலை 00.01முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த புதிய முறையால் எந்தெந்த விமானங்களில் "அதிக ஆபத்துள்ள" நாடுகளிலிருந்து எத்தனை பயணிகள் வருகின்றனா்,அவா்கள் எந்தெந்த நாடுகளுக்கு சென்றுவிட்டு வருகின்றனா் என்ற முழுவிபரங்கள், சென்னை உள்ளிட்ட சா்வதேச விமானநிலையங்களில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு முன்னதாகவே தெரிந்துவிடும். அதைப்பொறுத்து அவா்களுக்கான ஆா்டி பிசிஆா் டெஸ்ட் எடுப்பதற்கான ஏற்பாடுகளுடன் தயாா்நிலையில் இருப்பாா்கள். அதோடு பயணிகள் டெஸ்ட்டிற்கான கட்டணத்தையும் இணைய தளம் மூலமாகவே கட்டிவிடுவதால், இங்கு பயணிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது, விரைவில் ரிசல்ட் வந்து, பயணிகள் வீடுகளுக்கு சென்றுவிடலாம் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!