கடலூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண உதவி: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண உதவி: முதல்வர் ஸ்டாலின்
X
கடலூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம், எம்.புதூர் கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெரியகரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சித்ரா (வயது 35), நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா (வயது 50) மற்றும் மூலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ் (வயது 34) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின். உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு தலா ரூபாய் மூன்று இலட்சம் நிதியுதவி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இதே விபத்தில் காயமடைந்த நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தா என்பவருக்கு கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!