கொலை செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ.,க்கு ரூ.1 கோடி நிதியுதவி: அண்ணாமலை வலியுறுத்தல்

கொலை செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ.,க்கு ரூ.1 கோடி நிதியுதவி: அண்ணாமலை வலியுறுத்தல்
X

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

கீரனூரில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் ஆடு திருடர்களை பிடிக்கச் சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நேற்று படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திருச்சி மாவட்டம், நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கயவர்களால் நேற்று இரவு வெட்டிக் கொல்லப்பட்டார் என்கின்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலைப்பாட்டில் தான் நம்முடைய காவல்துறை சகோதர சகோதரிகள் பணியாற்றுகிறார்கள்.

பணி நேரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு சிறப்பு சட்டம் எதுவும் கிடையாது, இது போன்ற நிகழ்வுகள் அந்த சிறப்பு சட்டம் வேகமாக வர வேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறது.

மாநில அரசு கூட இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகையை அறிவித்து அதை செயல்படுத்த வேண்டும். அன்னாரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!