வளர்ச்சி, ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுவின் ஆய்வுக் கூட்டம்

வளர்ச்சி, ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுவின் ஆய்வுக் கூட்டம்
X

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட அளவிலான வளர்ச்சி,ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் மாநில அளவிலான இரண்டாவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் மாநில அளவிலான இரண்டாவது ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் மாநில அளவிலான இரண்டாவது ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் மாநில அளவிலான இரண்டாவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசின் பங்களிப்புடன் 15 துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் 41 திட்டங்களை கண்காணிக்க மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA குழு) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக முதல்வரும், துணைத் தலைவராக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும் உள்ளனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், ஒன்றிய அரசின் பங்களிப்புடன் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களான பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம், தேசிய நலவாழ்வு குழுமம் (National Health Mission), ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் அமலாக்கம் மற்றும் பிரதம மந்திரி முன்னோடி கிராமத் திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில், பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பணிகளை விரைவுபடுத்தி குறித்த காலத்திற்குள் முடித்திட வேண்டும் எனவும், திட்ட செயல்பாட்டில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெறும் வகையில் செயல்பட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த கூடுதல் நிதியை ஒன்றிய அரசிடமிருந்து பெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தினார்.

மேலும், கண்காணிப்புக் குழு உறுப்பினர்களின் செயல்பாடுகள் ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் நிலையான வளர்ச்சியையும், சமூக நீதியையும், சமத்துவத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்கிடும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ஆ. ராசா, எம். செல்வராஜ், பி.ஆர்.நடராஜன், சு.திருநாவுக்கரசர், தொல். திருமாவளவன், கே.நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், டாக்டர் என்.எழிலன், டி.கே.ஜி.நீலமேகம், எம்.பூமிநாதன், ஜே.எம்.எச்.அசன் மவுலானா, கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, அரசு துறைச் செயலாளர்கள், துறை தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு