தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகை

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகை
X

பைல் படம்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த சலுகை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முந்தைய மாத கணக்கீட்டு முறையைப் பின்பற்றி மின்கட்டணம் செலுத்த வேண்டும். ஜூன் 15- ஆம் தேதி முதல் ஜூன் 30- ஆம் தேதி வரையிலான காலத்தில் கடந்தாண்டு ஜூன் மாத மின் கட்டணத்தைச் செலுத்தலாம்.

கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு மின் கட்டண சலுகை பொருந்தும்.

புதிய நுகர்வோர், கணக்கீடு இல்லாதோர், கூடுதல் கட்டணம் என கருதுவோர் 2021 ஏப்ரல் மாத கட்டணத்தை செலுத்தலாம். 2021- ஆம் ஆண்டுக்கான உத்தேச கட்டணம் ஆகஸ்ட் மாதம் முறைப்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மின்வாரியம் அறிவித்திருக்கும் சலுகைகளின்படி, இம்மாதத்திற்கான மின் கட்டணத்தை, 2019 ஆண்டு ஜூன் மாதத்தில் செலுத்தப்பட்ட தொகையினை உத்தேசமாக கணக்கீடு செய்து கட்டலாம் . அந்த கட்டணம் கூடுதலாக இருப்பதாகக் கருதுபவர்கள், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கான மின் கணக்கீட்டின்படி உத்தேசமாக மின் கட்டணத்தை செலுத்தலாம் எனவும் மின்வாரியம் கூறியிருக்கிறது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது