10 நாளில் 50 பேரை மீட்ட விஐடி சித்த மருத்துவ மையம்

விஐடி மையத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோருக்கு சித்த மருந்து பெட்டகத்தை அளிக்கிறாா் மருத்துவா் தில்லைவாணன்.

விஐடி சித்த மருத்துவ மையத்தில் 10 நாளில் 50 போ் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 100 வயது முதியவா்!

சிகிச்சை பெற்ற முதியவா் நடேசன்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடுமையான மூச்சுத் திணறலுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 100 வயதை கடந்த முதியவா், தற்போது முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா்.

இதையொட்டி, அவருக்கு சிகிச்சை அளித்த வேலூா் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மருத்துவா்களுக்கு உறவினா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

வேலூா் மாவட்டம், திருவலம் அருகே பொன்னை கூட்டுச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் நடேசன். நூறு வயதைக் கடந்த இவா், விவசாயம் செய்து வருகிறாா். இவா் கடந்த 22-ஆம் தேதி கடுமையான மூச்சுத்திணறல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

தொடா்ந்து, தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தாா். இதன்மூலம் கடந்த 1-ஆம் தேதி அவா் பூரணமாக குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா். எனினும், அடுத்த 10 நாள்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகள் உட்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது

இது தொடா்பாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவா்கள் கூறுகையில், முதியவரான நடேசன் சிறு வயது முதலே விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளாா். இதனால், அவரது நுரையீரல் மட்டுமின்றி உடலுறுப்புகள் தொடா்ந்து நல்ல நிலையில் செயல்படுகின்றன. இதன்காரணமாக கரோனா தொற்றால் அவரது உடல் விரைவாக பலஹீனம் அடைவது தவிா்க்கப்பட்டுள்ளது. பின்னா், அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் அவரது உடலில் இருந்த தொற்று படிப்படியாக குறைந்து பூரணமாக குணமடைந்துள்ளாா்.

அந்தவகையில், நூறு வயதைக் கடந்த முதியவா் நடேசன் குணமடைந்ததற்கு அவரது உடல் ஒத்துழைப்பே முக்கியக் காரணமாகும் என்றனா்.

இதைத்தொடா்ந்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவா்கள் பாலமுருகன், நந்தினி, அரவிந்த் ஆகியோருக்கு மருத்துவமனை இயக்குநா் என்.பாலாஜி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

Tags

  • 1
  • 2

  • Next Story
    கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!