பன்னீரை காப்பாற்றிய எம்.ஜி.ஆர்: இதற்கு பின் இத்தனை காரணங்களா?

ADMK Party | MGR Party
X
ADMK Party - ஓ.பி.எஸ். மீண்டும் அசுர பலம் பெற்றதற்கு எம்.ஜி.ஆர். வகுத்த வைத்த கட்சி விதிகளே காரணம்.

ADMK Party - அதிமுக தொடங்கின போது திமுகவில் இருந்து பெருந்தலைகள் யாரும் எம்ஜிஆருடன் போகவில்லை. அது எம்ஜிஆருக்கு பெரிய குறையாக இருந்தது. ஆனால் அவரது ரசிகர் மன்றங்களின் பலம், பெண்களின் ஒட்டுமொத்த ஆதரவு இரண்டும் சேர்ந்து அவருக்கு முதல் இடைத்தேர்தல் வெற்றியை திண்டுக்கல்லில் பெற்றுத்தந்தது. அதன்பிறகு தான் திமுகவில் கருணாநிதி மீது கோபத்தில் இருந்த பெருந்தலைகளுக்கு எம்ஜிஆர் மீது நம்பிக்கை வந்து ஒவ்வொருவராக அதிமுகவுக்கு போகத் தொடங்கினர்.

அவர்கள் போவதை கருணாநிதி தடுக்கலை. அதனாலேயே எம்ஜிஆருக்கு சந்தேகமும் அச்சமும் வந்துடுச்சு. தன்னை வேவு பார்க்கதான் இவர்களை கருணாநிதி அனுப்பி வைத்துள்ளதாகவும், பின்னாளில் இவர்கள் தனது பதவியையே கைப்பற்றிடுவாங்களோ என்றும் சந்தேகப்பட்டார். அதற்கு எம்ஜிஆரின் ஆடிட்டர் மற்றும் வழக்கறிஞர் சொன்ன யோசனைதான் 'அடிப்படை உறுப்பினர்கள் நேரடியாக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும்' படி கட்சி விதியை மாற்றுவது என்பது.

அதன்படி அதிமுகவில் மட்டும் உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு ஓட்டு போடுவார்கள். ஒன்று நேரடியா பொதுச் செயலாளருக்கு, இரண்டாவது வழக்கப்படி வட்டச் செயலாளருக்கு.. இந்த முறையில் எந்த சக்தியாலும் தொண்டர்களை மீறி தன்னை கவிழ்த்து விட முடியாது என அவர் நம்பினார்.

அந்த நம்பிக்கையும் அப்படியே நடந்தது. பின்னாளில் ஜானகி அப்படி அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தான், ஜெயலலிதாவால் கட்சியைக் கைப்பற்ற முடியாமல் போனது. கட்சி உடைந்தால் சின்னமும் போயிடும். ஜானகி அம்மாவே விட்டுத் தந்த பிறகு தான் கட்சியும், சின்னமும் முழுமையாக ஜெ கையில் வந்தது. மேலோட்டமாக பார்ப்பதற்கு இந்த விதி ஜனநாயகப் பூர்வமாக இருப்பதைப் போல தோன்றினாலும், இது தரும் அசுர சக்தி, கட்சிக்குள் முழுமையான சர்வாதிகாரத்தையே கொண்டு வந்தது, வருகிறது, வரும். எனவேதான் நாட்டிலேயே அதிமுகவை தவிர மற்ற கட்சிகள் அனைத்துமே பல அடுக்கு ஜனநாயக முறையைப் பயன்படுத்துகின்றன.

தற்சமயம் அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியே இல்லை. அதற்கு இணையாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என இரு நபர்கள், ஒற்றை அதிகாரம் என்றொரு முறையை கொண்டு வந்து அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து உள்ளது. இருவரில் ஒருவர் சம்மதம் இல்லை என்றாலும் கட்சியில் எந்த முடிவையும் சட்டப்படி எடுக்க முடியாது. இப்போது ஓபிஎஸ் ஒருபுறம், எதிரில் அதிமுகவில் அத்தனை பதவிகள் கொண்டோரும் நின்றாலும் மேட்ச் டை தான். ரிசல்ட் கிடைக்காது. எனவே அடிப்படை உறுப்பினர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓபிஎஸ்சை யாராலும் பதவி நீக்கம் செய்யவே முடியாது.

எம்ஜிஆருக்கு கருணாநிதி மீது இருந்த அச்சம் தற்சமயம் ஓபிஎஸ்சை காப்பாற்றுகிறது.

ஒருவேளை இதையும் மீறி பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஒப்புதல் இன்றி ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டால், ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றால் கட்டாயம் இரட்டை இலை முடக்கப்படும். இரட்டை இலை முடக்கப்பட வேண்டும் என்பதே திட்டமாக இருக்கலாம். இப்போது நடப்பது எல்லாமே பெரிய திட்டத்திற்கான சிறிய முயற்சிகளே! . தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தாகணுமே!

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
ai healthcare products