சோளிங்கர், பாணாவரம், பொன்னை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

சோளிங்கர், பாணாவரம், பொன்னை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
X
மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை சோளிங்கர், பாணாவரம், பொன்னை பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது

சோளிங்கர் துணை மின் நிலையம் மற்றும் மேல் வெங்கடாபுரம் துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப்படவிருக்கிறது.

இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை (சனிக்கிழமை) சோளிங்கர் துணை மின் நிலையம் மற்றும் மேல் வெங்கடாபுரம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோளிங்கர், எறும்பி, தாடூர், கல்பட்டு, தாளிக்கால், போளிப்பாக்கம், பழையபாளையம், தப்பூர், பாண்டியநல்லூர், பாணாவரம், சோமசுமுத்திரம், கரிக்கல், மேல்வெங்கடாபுரம், ஜம்புகுளம், கொடைக்கல், சூரை, மருதாலம், தலங்கை, பொன்னை, ஒட்டநேரி, கீரைசாத்து, மிளகாய் குப்பம், எஸ்.என்.பாளையம், கே.என். பாளையம், பொன்னை புதூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!