சோளிங்கர் பக்தோசித பெருமாள் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது

சோளிங்கர் பக்தோசித பெருமாள் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது
X

சோளிங்கர் பக்தோசித பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணி

சோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்மர் ஆலய உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் ஆலயத்தில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது

108 திவ்ய தளங்களில் ஒன்றான ராணிப்பேட்டை மாவட்டம் அருள்மிகு ஸ்ரீ யோக நரசிம்மர் திருக்கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி உதவி ஆணையர் ஜெயா தலைமையில், ஆலய காண்காணிப்பாளர் விஜயன்‌ மேற்பார்வையில் பக்தோசித பெருமாள் ஆலயத்தில் நடைபெற்றது .

இதில் யோக நரசிம்மர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் காணிக்கை வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 7 உண்டியலும் எண்ணப்பட்டது. அதில் காணிக்கையாக 16 லட்சத்து 85 ஆயிரத்து 567 ரூபாய் பணமும், 122 கிராம் தங்கமும், 116 வெள்ளியும் இருந்தது. இதை ஆலய கணக்கில் வரவு வைத்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!