சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ரூ.4.53 லட்சம் உண்டியல் காணிக்கை

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ரூ.4.53 லட்சம் உண்டியல் காணிக்கை
X

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் மற்றும் மலைக் கோயில்களில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடந்தது.

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் மற்றும் பிற கோயில்களில் ரூ,4.53 லட்சம் உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில், புகழ்பெற்ற வைணவ திவ்யஸ்தலமாக லஷ்மிநரசிம்மர் கோயில் உள்ளது. மேலும், மலையில் யோகநரசிம்மர், ஆஞ்நேயர் கோயில்கள் உள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் உள்பட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், இங்கு வந்து சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இக்கோவில்களில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. உதவி ஆணையர்கள் ஜெயா, தியாகராஜன் மற்றும் கோயில் அறங்காவலர்கள் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், மொத்தம் ரூ. 45லட்சத்து 38ஆயிரம் ரொக்கம்; அத்துடன், 156கிராம் தங்கம் மற்றும் 240கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture