நெமிலி பஜாரில் கடைகள் ஆக்கிரமிப்பை அகற்றிய நெடுஞ்சாலைத்துறை
நெமிலியில் நெடுஞ்சாலை துறையினரால் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது
இராணிப்பேட்டை மாவட்டம் அரகோணத்திலிருந்து நெமிலி, பணப்பாக்கம் வழியாக வேலூர் செல்லும் பிரதான சாலை உள்ளது. நெமிலியில் பல ஆண்டுகளாக பஜார் வழியாக செல்லும் 50அடி அகலமான சாலையை அங்கு இருபுறமுள்ள கடைகள், சுமார் 10அடிக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்திருந்தன. இதனால், சாலை,பெரிய வாகனங்கள் ஒன்று மட்டுமே சாலையில் செல்லும் அளவிற்கும், எதிரே வாகனங்கள் வர வழியின்றி குறுகலாக இருந்தது.
அதன் காரணமாக,எப்போதும் அப்பகுதி பெரும் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டு வந்தது. அவசரத்திற்குச் செல்லும் ஆம்புலன்ஸ் செல்லக்கூட வழிியின்றி பெரும் அவதியுற்று வந்தனர். இதனால் ஏற்பட்ட காலதாமதத்தால் சில உயிரிழப்புகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்த கோரி மாவட்ட நிர்வாகம், மற்றும் நெடுஞ்சாலைத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். அதன்பேரில் கடந்த இரு நாட்களாக , நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில், நெமிலி போலீஸார் பாதுகாப்பில் நெமிலி பேருந்து நிலையத்திலிருந்து பஜார் சாலையில் ஆக்கிரமித்துக் கட்டியிருந்த கடைகளை அகற்றினர். .
தற்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலையில். ,சாலை அகன்று விரிந்த சாலையாகக் காணப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சாலையைக் கண்டு ஆச்சரியமடைந்தும் பெரியசாலையாக காணப்படுவதால் இனி போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படாது என்று மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் சாலையை ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றி முழுவதுமாக தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து செய்து மீண்டும் கடைகள்ஆக்கிரமிப்பு செய்யாதவாறு தடுத்திட வேண்டுமென நெமிலி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu