சோளிங்கர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

சோளிங்கர் அருகே அரசு பள்ளி மாணவர்கள்  சாலை மறியல்
X

ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்

சோளிங்கர் அருகே மேல் வீராணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர் இல்லாததை கண்டித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே மேல் வீராணத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர் இல்லாததை கண்டித்து மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர.

மேல்வீராணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 110 மாணவர்கள் படித்து வருவதாகவும் தலைமை ஆசிரியர் உட்பட 5 ஆசிரியர்கள் பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது . இந்நிலையில் மாவட்டக்கல்வித்துறை கலந்தாய்வின் பேரில் 3 ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு இட மாற்றம் செய்துள்ளது.

மேலும் பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட ஒரே ஆசிரியர் மட்டுமே மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் சூழல் உள்ளது . வகுப்பறைகளில் சில பழுதடைந்துள்ளது. தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் இடமாற்றம் தங்கள் கல்வியில் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக உள்ளது என பள்ளி மாணவர்கள்அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்

சம்பவம் குறித்தறிந்து வந்த பாணாவரம் போலீஸார் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக மாற்றம் செய்த ஆசிரியர்கள் அல்லது புதிய ஆசிரியர்களை நியமிக்க பரிசீலனை செய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு தங்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.

Tags

Next Story
ai marketing future