சோளிங்கர் அருகே கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சோளிங்கர் அருகே கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

சோளிங்கர் அருகே கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சோளிங்கர் அடுத்த மேல்வீராணத்தைச்.சேர்ந்த விவசாயிகள் நெல்லுக்கான பணம் கேட்டு நெல்கொள்முதல் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பானாவரம் மேல்வீராணம் பச்சையம்மன் கோயில். அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. அதில் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச்சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 3மாதங்களுக்கு முன்பு , தங்கள் நிலத்தில் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்கு கொண்டு வந்து இறக்கி உள்ளனர்.

இந்நிலையில், கொள்முதல் செய்த நெல்லை எடை போட்டு12000 மூட்டைகளுக்கு ரசீது வழங்காமலும், அவற்றிற்கான பணம் ரூ.93,60,000ஐ விவசாயிகளுக்கு வழங்காமலும் நெல்கொள்முதல் நிலைய பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் தட்டிக்கழித்து வருகின்றனர்

எனவே, அதிகாரிகளின் அலட்சியபோக்கை கண்டித்து பாதிப்படைந்த விவசாயிகள் நெல்கொள்முதல் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!