சோளிங்கர் கோயிலில் ஊரடங்கால் வேலையின்றி வறுமையில் வாடும் டோலி தூக்குபவர்கள்

சோளிங்கர் கோயிலில் ஊரடங்கால் வேலையின்றி வறுமையில் வாடும் டோலி தூக்குபவர்கள்
X

சோளிங்கர் கோயிலில் ஊரடங்கால் வேலையின்றி வறுமையில் வாடும் டோலி தூக்குபவர்கள்

சோளிங்கர் மலைக்கோயிலில் டோலி தூக்கும் தொழிலாளர்கள் ஊரடங்கில் வேலையின்றி வறுமையில் வாடுவதால் உதவி செய்ய அரசுக்கு கோரிக்கை

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள 1308 படிகளைக் கொண்ட யோக நரசிம்மர் கோயில் என்ற பெரிய மலை, மற்றும் 405 படிகளைக் கொண்ட யோக ஆஞ்சநேயர் கோயில் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றதும் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் உள்ளது.

இவ்விரு கோயில்களுக்கும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.அதில் முதியவர்கள்,உடல்நலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மலையேற முடியாதவர்களை டோலியில் அமர்த்தி மலை ஏற்றி, இறக்கி பிழைப்பு நடத்தி வரும் கூலித்தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக கொரோனா நோய் தொற்றுகாரணமாக அனைத்து கோயில்களையும் மூட அரசு உத்தரவிட்டது அதனைத்தொடர்ந்து சோளிங்கர் கோயிலும் மூடப்பட்டது.

அதனால் பக்தர்கள் வருகை முற்றிலும் நின்றதால் டோலி தூக்கும் கூலித்தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் 200க்கும் மேற்பட்டோர் வறுமையில் இருந்து வருகின்றனர். எனவே வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தங்களுக்கு அரசு உதவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!