பாணாவரத்தில் ரெயில்வே ஊழியர் கொலை: குற்றவாளி போலீஸில் வாக்குமூலம்

பாணாவரத்தில் ரெயில்வே ஊழியர் கொலை:  குற்றவாளி போலீஸில் வாக்குமூலம்
X
பாணாவரத்தில் ரெயில்வே ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த குற்றவாளி போலீஸில் வாக்குமூலம்

இராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தையடுத்த ரங்காபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் வரதராஜ்,62 , அவர் கடந்த மாதம் 7ந்தேதி இரவு அதேபகுதியில் உள்ள தனது நிலத்தில் படுத்திருந்த போது மர்ம நபர்களால் கொலைசெய்யப்பட்டு பிணமாகக்கிடந்தார்.

இது குறித்து தகவலறிந்த பாணாவரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மோப்ப நாயை வரவழைத்து விசாரணை நடத்தினர். ஆனாலும் கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளி குறித்து தகவல் ஏதும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர்.

இந்நிலையில் திடீரென திருத்தணியைச் சேர்ந்த பார்த்தீபன் என்பவர்,சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் அக்கொலைத் தொடர்பாக சரணடைந்ததைத் தொடர்ந்து நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் பாணாவரம் போலீஸார் பார்த்தீபனை கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர்

அதில் பார்த்தீபன் போலீஸாரிடம் கூறியதாவது: பாணாவரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்த ரெட்டி,சின்னப்பரெட்டி ஆகியோர் தங்கள் சொத்துக்களை பாணாவரத்திலுள்ள நிலத்தில் கோவிந்தரெட்டியும் மங்கலத்திலுள்ள நிலத்தில் சின்னப்பரெட்டியும் பயிரிட்டு அனுபவித்துக் கொள்வது என தங்களுக்குள் வாய் மொழியாகப் பேசி பாகப்பிரிவிவினை செய்து கொண்டு அனுபவித்து வந்துள்ளனர்.

அதில் சின்னப்ப ரெட்டி அனுபவத்துவரும் மங்கலத்திலுள்ள நிலம் சென்னை பெங்களூர் விரைவு சாலைக்கு கையகப்படுத்தப்பட்டது. நஷ்ட ஈடாக பணம் பெற, வாய்மொழி பாகப்பிரிவினை என்பதால் கோவிந்த ரெட்டி வாரிசுதாரர்களின் கையெழுத்து அவசியம் என்பதால் இருதரப்பினருக்கும் பிரச்சினை இருந்து வருகிறது.

அதில் வரதராஜ் தலையிட்டு கோவிந்த ரெட்டி வாரிசுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். அதனால் இரு குடும்பத்தாருக்கும் பணம் பங்கீடு பிரச்சினை மேலும் அதிகரித்தது. எனவே சின்னப்பரெட்டி மகன் மகன் குமரன், வரதராஜ் மீது ஆத்திரமடைந்து வரதராஜைக் கொலை செய்ய திட்டமிட்டு திருத்தணியிலுள்ள அவரது நண்பர் லட்சுமணனிடம் கூலிப்படையை ஏற்பாடு செய்யக் கேட்டுக்கொண்டார்.

அதன்பேரில் லட்சுமணன் கேட்டதால் அதற்காக ரூபாய் 50000ஐ அட்வான்ஸாக வழங்கியதைத் தொடர்ந்து, குமரனும் நானும் சேர்ந்து சம்பவ தினத்தன்று இரவு வரதராஜ் அவரது நிலத்தில் உள்ள பம்பு செட்டில் உள்ள திண்ணையில் உறங்கிக்கொண்டிருந்த போது, கத்தியால் வரதராஜனின் கழுத்தில் குத்தினேன். குமரன் அவரது முகத்தில் குத்தியபோது அதில் படுகாயமடைந்த வரதராஜ் அலறினார்.

உடனே அவர்மீது மிளகாய்பொடியைத் தூவி அருகில் சேற்றில் வைத்துக் கொன்றோம். பின்னர் தடயங்களை முற்றிலுமாக அழித்து விட்டு அங்கிருந்து இருவரும் தப்பினோம். பிறகு திருத்தணி அடுத்து உள்ள தனது மாமா வீட்டில் தங்கியிருந்ததாகவும் போலீஸார் தன்னைத் தேடி வருவதைக் கேள்விப்பட்டு நீதிமன்றத்தில் சரண்டந்ததாக பார்த்தீபன் தனது வாக்கு மூலமாக போலீஸாரிடம் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து போலீஸார் பார்த்தீபனின் வாக்குமூலத்தை ஆதாரமாக வைத்து முக்கிய குற்றவாளியான குமரன் , அவனுக்கு உதவிய லட்சுமணன் இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!