ஜெகத்ரட்சகன் இந்தியாவிலேயே மிகவும் பணக்கார எம்.பி: அண்ணாமலை சாடல்
என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது சோளிங்கரில் பேசும் பாஜக தலைவர் அண்ணாமலை
சோளிங்கர் நகரின் மையத்தில் அமைந்துள்ள பக்கோசித பெருமாள் கோவில் எதிரே தொண்டர்களிடையே அண்ணாமலை பேசியதாவது:
அரக்கோணம் தொகுதி மக்கள், மிகவும் பரிதாபத்திற்கு உரியவர்கள். தங்களின் தேவையை யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் உள்ளனர். தமிழகத்திலேயே மத்திய அரசின் திட்டங்கள் மிகக் குறைவாகப் பெற்றுள்ள மாவட்டமாக, ராணிப்பேட்டை மாவட்டம் உள்ளது.
மத்திய அரசின் திட்டங்களைத் தொகுதிக்குக் கொண்டு வருவது மட்டுமே, நாடாளுமன்ற உறுப்பினருடைய பணி. ஆனால், அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜகத்ரட்சகனுக்கு, தொகுதி பற்றி எந்தக் கவலையும் இல்லை. அரக்கோணம் தொகுதி எம்.பி., ஜெகத்ரட்சகன், இந்தியாவிலேயே மிகவும் பணக்கார எம்.பி., அவருக்கு, தனது பல ஆயிரம் கோடி சொத்துகளைப் பாதுகாக்கவே நேரம் சரியாயிருக்கும். 1250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது. இவரால் ஆற்காடுக்கு ஒரு பயனும் இல்லை.
மக்களுக்குப் பயன்படும் திட்டங்களை தனது தொகுதிக்குக் கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில் அவருக்கு உரிய இடங்களில் சோதனை மேற்கொண்ட போது, 1,250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்டது. அவர் வசதியாக தான் இருக்கிறார். ஆனால், அவரது தொகுதி மக்கள் தான் பரிதாப நிலையில் உள்ளனர்.
இந்த மாவட்டத்தை சேர்ந்தவர் அமைச்சர் காந்தி. காந்தி என்ற பெயர் வைத்திருப்பதாலேயே, அவருக்கு, கைத்தறித்துறை வழங்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் அவர் புதிதாக கட்டிவரும் பங்களாவை இன்று பா.ஜ.க தொண்டர்கள் எனக்கு காட்டினர். எவ்வளவு ஆடம்பரமாக, விஸ்தீரனமாக கட்டப்பட்டு வருகிறது.
சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ., காங்கிரஸ், கட்சியை சேர்ந்தவர். காங்கிரஸ், கட்சியினரை, தேர்தலின் போது மட்டுமே பார்க்க முடியும். இந்த தொகுதி மக்கள் யாரிடம் தங்களின் கோரிக்கைகளை தேவைகளை தெரிவிக்க முடியும்?
ராமர் கோவில், காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, பா.ஜ., ஆட்சியில்தான் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்தியாவை, உலகளவில் பொருளாதர வளர்ச்சி நாடுகள் பட்டியலில், 2044ல் மூன்றாவது இடத்திற்கு கொண்டு வருவதாக, கடந்த 2014 தேர்தலின் போது காங்., தெரிவித்தது.
ஆனால் கடந்த 10 ஆண்டுகால, மோடி ஆட்சியில் இந்தியா, பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகள் பட்டியலில், ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளது. வரும் மக்களவை தேர்தலில் மோடி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்ததும், 2018ல், மூன்றாவது இடத்திற்கு இந்தியா சென்றுவிடும்.
அரக்கோணம் தொகுதி மக்கள் சேவை செய்யக்கூடிய, ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கும் ஒருவரை அரக்கோணம் தொகுதி எம்.பி.,யாக தேர்ந்தெடுக்க நீங்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். வரும் தேர்தலில் அரக்கோணம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பாஜக வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் ராணிப்பேட்டை மாவட்டத்துக்குக் கொண்டு வந்து சேர்ப்பதை நாங்கள் உறுதி செய்வோம் என்று பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu