விவசாயிகள் அல்லாதோர் நெல்லை விற்றால் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

விவசாயிகள் அல்லாதோர் நெல்லை விற்றால் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
X

இராணிப்பேட்டை மாவட்ட கிராம நிரவாக அலுவலர்களுக்கான ஆலோசனைகள் வழங்கும் கூட்டம் 

அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அல்லாதவர் நெல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படுமென கலெக்டர் எச்சரிக்கை

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கோட்டத்தை சேர்ந்த அரக்கோணம், நெமிலி மற்றும் சோளிங்கர் வட்டங்களில் பணியாற்றி வரும் கிராம நிரவாக அலுவலர்களுக்கான ஆலோசனைகள் வழங்கும் கூட்டம் நெமிலியில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை வகித்து ஆலோசனைகளை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள் விவசாயிகள் நெல்லை விற்க கோரும் சிட்டா,அடங்கல் ஆகியவற்றை வழங்குமுன்பு நேரிடியாகச்சென்று கள ஆய்வு செய்தபின்பு வழங்கவேண்டும். தற்போது மேற்படி தாலூக்காக்களில் செயல்பட்டு வரும் 29 நேரடி கொள்முதல் நிலையங்களில் பிரச்சினைகள் ஏற்படாமலும் உண்மையான விவசாயிகள் பயனடையும் வகையிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், இராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்தபருவத்தில் 79அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. அதில் ,விவசாயிகள் போர்வையில் வியாபாரிகள் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து விற்பனை செயததாக புகார்கள் வந்துள்ளது. .அதன்மீது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் துறை ரீதியலான விசாரணை நடத்தி வருகிறது.

மாவட்டக் குழுவின் ஆலோசனையின் பேரில் சம்பந்தபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கும்அடங்கல் ஆவணங்களை உண்மையான விவசாயிகளைக் கண்டறிந்து வழங்க வேண்டும் . பல இடங்களில் சம்பத்தமில்லாத வகையில் அடங்கல் வழக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் எழுப்பியுள்ளனர். அவ்வாறு, வழங்கப்பட்டிருப்பின் அவை உடனடியாக தகுதிதீக்கம் செய்யப்படவேண்டும்.

நெமிலி,சோளிங்கர்மற்றும்அரக்கோணம் ஆகிய வட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 29 நேரடி கொள்முதல்நிலையங்களில் தற்போதய சாகுபடிக்கு செயல்படும் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விவசாயிகள் போர்வையில் வியாபாரிகள் விற்பனை செயவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைத்து நெல்கொள்முதல் நிலையங்களையும் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். விவசாயிகள் பலனடையாமல் இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்யப்படுவது வருந்ததக்கதாகும்.

விவசாயிகளிடமிருந்து நெல்லை தமிழக அரசு உரிய விலை நிர்ணயித்து வாங்கிவருகிறது எனவே லாப நோக்கில்செயல்படு பவர்கள் தடுக்கப்படவேண்டும் எனவே இனி இவ்வாறான புகார்கள் கண்டறியப்பட்டால் துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் அரசு ஏற்படும் வருவாய் இழப்பு முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்களிடமிருந்து வசூலிக்கப்படும். எனவே நெல்கொள்முதல்நிலையத்தில் உண்மையான விவசாயிகள்தவிர போலியான ஆவணங்களுடன் நெல் விற்பனை செய்யப்படுவது முற்றிலும் தடுக்கப்படவேண்டும் .

எனவே விவசாயிகள் விற்பனைக்காக அடங்கல் பெற கோரிக்கை வைத்தால் கிராம நிர்வாக அலுவலர்கள் நேரிடையாக சென்று பார்வையிட்டு அடங்கலில் பயிரிட்டுள்ளவை மற்றும் பயிரிடப்படாதவை ஆகியவற்றை பதிவுசெய்து வழங்க வேண்டும். அவற்றின் அடிப்படையிலேயே நெல்லை கொள்முதல் செய்யபடுகிறது. ஆகவே கிராம நிர்வாக அலுவலர்கள் உயரதிகாரிகள் மற்றும் மூன்றாம்நபர்களின் பரிந்துரைகளை நிராகரித்து கள ஆய்வு செய்து உண்மையான வற்றை பதிவுசெய்து சரியான அடங்கலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

அரக்கோணம் வேளாண்துறை ஆய்வறிக்கையின்படி ஒருஏக்கருக்கு 50முதல் 60நெல் மூட்டைகள் வரை சாகுபடி செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி அடங்கலில் கூறப்பட்டுள்ள நில அளவையில் அறுவடையான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ள கணக்குகளை, கண்காணிக்கும் பணிகளை நுகர்பொருள் வாணிபக்கழகம், கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களில் வட்டாட்சியர்கள் ஆய்வு செய்து கொள்முதல் செய்யப்பட்டவை, செய்யப்படவேண்டியவை குறித்த ஆய்வறிக்கையை அளிக்க வேண்டும். யாருடைய தலையீடும் இருக்கக்கூடாது அனைத்து அலுவலர்களும் தங்கள் பணியில் முறையான ஆவணங்களை வழங்கிட வேண்டும் கணக்குக்களை முறையாக சரிபார்த்து கண்காணிப்பு பணிகளில்உறுதியுடன் செயல்படவேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஆலோசனைகள் வழங்கும் கூட்டத்தில் அரக்கோணம் கோட்டாட்சியர் சிவதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, வட்டாட்சியர்கள் சுமதி,பழனிராஜன், வெற்றிக்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாளர்கள் பிரேமா, ரவிச்சந்திரன் நெமிலி பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் மற்றம் கிராம நிரவாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்..

Tags

Next Story
Weight Loss Tips In Tamil