மீன் வளர்க்க 50 சதவீதம் மானியம்: ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் அறிவிப்பு
கோப்பு படம்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தில் 50சதவீத மானியம் பெற்று மீன் வளர்க்க ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மீன் வளர்ப்பினை விரிவு படுத்திட மானியம.வழங்கும் திட்டத்தின் கீழ்.(subsidyassistance for expansion of fish culture in Tamilnadu) ஒரு ஹெக்டருக்கு (2.47ஏக்கரில்) ₹7லட்சம் செலவு செய்து மீன் குளம் அமைத்திட50சதவீத மானியமாக₹3.50லட்சம் மற்றும் ஒருஹெக்டரில் நீர் பரப்புள்ள மீன் வளர்ப்பு செய்திட உள்ளீடு செலவான ₹1.50 லட்சத்தில் 40 சதவீத மானியமான ₹60 ஆயிரம் (Back ended subsidy) அளிக்கப்படும் திட்டம் செயல்பட உள்ளது .
எனவே 0.25ஹெக்டர் முதல் ஒரு ஹெக்டர் வரை குளங்கள் அமைத்து மீன் வளர்க்க இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் மீன் வளர்க்க புதிய பயனாளிகள் சொந்த நிலம் (அ) 5 வருடத்திற்கு குத்தகைப் பெற்றிருக்க வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
எனவே இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவரநலத்துறை உதவி இயக்குநர் அலுவலதில் நேரடியாகவோ (அ) தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கக் கேட்டுக் கொள்வதாக இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu