இராணிப்பேட்டையில் காவலர்கள்வீரவணக்க நினைவு தினம்: எஸ்பி தலைமையில் அனுசரிப்பு

காவலர் வீரவணக்க நினைவு தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படைகவாத்து மைதானத்தில் எஸ்பி தலைமையில் 60 குண்டுகள் முழங்க அஞ்சலி

கடந்த 1959அக்டோபர் 21ந்தேதி காஷ்மீரில் சீன எல்லைப்பகுதியான லடாக்கில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் ரோந்து சென்ற எல்லையப்பாதுகாப்புப்படையினரை சீன இராணுவம் மறைந்திருந்து திடீர்தாக்குதல் நடத்தியது . அதில் 10 காவலர்கள் உயிர் நீத்தனர். அப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 16ஆயிரம் அடி உயரமாகும். .

அன்று முதல் காவல்துறை சார்பில் அக்டோபர்21ந்தேதி பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு வீரவணக்க நினைவுதினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்று இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் இராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபா சத்தியன் தலைமையில் காவலர்கள மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக உயிரிழந்தவர்களின் நினைவு சின்னத்திற்கு எஸ்பி தீபாசத்தியன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் . அவரைத்தொடர்ந்து டிஎஸ்பிகள் புகழேந்திகணேஷ், பிரபு, இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலர்களின் உறவினர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர்ஆயுதப்படையைச்சேர்ந்த காவலர்கள் 60 குண்டுகள் முழங்கி மரியாதை செலுத்தினர்

Tags

Next Story