சிப்காட்டில் ஒரே நாளில் 107 வழக்கு எஸ்.ஐ சிதம்பரம் அதிரடி

சிப்காட்டில் ஒரே நாளில் 107 வழக்கு எஸ்.ஐ சிதம்பரம் அதிரடி
X
சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒரே நாளில் 107 பேர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் சப் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் நேற்று மாலை போலீசாருடன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டபோது, உரிய ஆவணமின்றி, ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்தவர்கள் மற்றும் காரில் சீட் பெல்ட் போடாமல் பயணித்தவர்கள் என 106 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.

அதே நேரத்தில் போலீஸார் நேற்று மாலை சிப்காட் டாஸ்மாக் கடை மூடிய பின்பு அருகில் உள்ள ஒரு இடத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றுக் கொண்டுருந்த சிப்காட் , காமராஜர் நகரை சேர்ந்த ராஜா என்பவனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் கொரோனா நோய் தடுப்பு விதியை கடைப்பிடிக்காமல் முகக் கவசம் அணியாமல் இல்லாமல் சுற்றி வந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!