முதலமைச்சரின் இளைஞர் மாநில விருதுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சமுதாய வளர்ச்சிக்கு சேவை செய்யும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு கடந்த 2015-ம் ஆண்டு முதல் "முதலமைச்சர் மாநில இளைஞர் விருது" ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை உள்ளடக்கியது.
அதன்படி, 2023ம் ஆண்டிற்கான முதல் அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற 15.08.2023 அன்று நடைபெறும் சுதந்திரதின விழாவில் முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:
கடந்த ஏப்ரல் 1, 2022 (1.4-2022) அன்று 15 வயது நிரம்பியவராக வரும்,மார்ச் 31, 2023 (31.3.2023) அன்று 35 வயதுக்குள்ளானவராகவும் இருத்தல் வேண்டும்.
கடந்த நிதியாண்டில் (2022-2023) மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும், விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும், அதற்கான சான்றும் இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் சேவை செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கஇயலாது, விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு, விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் ஏற்று கொள்ளப்படும்.
விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணைய தளமான www.sdat.tn.gov.in ல் உள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்பித்தல் வேண்டும். இணையதளம் மூலம் வருகிற 31-ந் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu