ஆற்காடு வேப்பூர் பைபாஸில் வாலிபர் குத்திக் கொலை; நண்பர் படுகாயம்

ஆற்காடு வேப்பூர் பைபாஸில் நண்பருடன் பைக்கில் சென்ற இளைஞர் கொலைசெய்யப்பட்டார் குற்றவாளியை போலீஸார் தேடிவருகின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆற்காடு வேப்பூர் பைபாஸில் வாலிபர் குத்திக் கொலை; நண்பர் படுகாயம்
X

கொலை செய்யப்பட்ட மணிகண்டன்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புக்கானா நாதமுனித் தெருவைச் சேர்ந்த மணிகண்டன்(28) ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்த அவரும்,அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் அருண் இருவரும் சேர்ந்து ஆற்காடு அடுத்த வேப்பூர், பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் ஆற்காடு நோக்கி வந்து கொண்டிருந்தனர் .

அப்போது, அவர்களை லாரி ஒன்று முந்திச்சென்றது. உடனே பைக்கை ஓட்டி வந்த அருண் லாரியை முந்திச்சென்று மடக்கி லாரி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அதில் ஆத்திரமடைந்த லாரி டிரைவர், மணிகண்டன் மற்றும் அருண் இருவரையும் கத்தியால் குத்திவிட்டு லாரியுடன் தப்பிச்சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. அதில் படுகாயமடைந்த மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது .

இந்நிலையில் அருண் மட்டும் பைக்கில் அருகிலுள்ள வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

நடந்த இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீஸார் மணிகண்டனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் ,கொலைக்குறித்து மணிகண்டனின் தாயார் நவநீதம் தந்த புகாரின் பேரில் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 12 July 2021 7:26 AM GMT

Related News