திமிரி அருகே கிராம தேவதை பொன்னியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா

திமிரி அருகே கிராம தேவதை பொன்னியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா
X

நம்பரை கிராம தேவதை பொன்னியம்மன் 

திமிரி அடுத்த நம்பரை கிராம தேவதை பொன்னியம்மன் கோயிலில் ஆடி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது

இராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த நம்பரை கிராமத்தின் கிராம தேவதையான பொன்னியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் ஆடிமாதத்தில் திருவிழாநடந்து வருகிறது.. இந்த ஆண்டும் வழக்கம்போலவே ஆடித்திருவிழா தொடங்கியது.

விழாவில் கிராமமக்கள் அம்மனுக்கு காப்புகட்டி விரதம்இருந்தனர். பின்பு நடந்த விழாவில் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ஊரணிப்பொங்கல் வைப்பு நிகழ்ச்சி நடந்தது .

அதனையடுத்து ,கூழ்வார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உற்சவர் விசேஷித்த அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு தேரில் வீதியுலா வந்தார். அப்போது , அம்மனை பக்தியுடன் வழிபட்ட ஊர்மக்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

விழாஏற்பாடுகளை நம்பரை கிராம பொதுமக்கள் செய்தனர் . விழாவில் நம்பரையைச் சுற்றியுள்ள கிராமத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வணங்கிச் சென்றனர்..

.

Tags

Next Story
ai marketing future