கர்ப்பிணிகளுக்கு அரசு அளிக்கும் உதவித்தொகையை அளிக்க கோரிக்கை
கர்ப்பிணிப்பெண்களுக்கு அரசு அளிக்கும் நலத்திட்டம்
தமிழகத்தில் அரசு சுகாதாரத் துறைசார்பில் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் அறிவித்துள்ள உதவித்தொகை ரூ.18ஆயிரத்தை கர்ப்பகாலத்தில் 3வது மாதம், 6வது மாதம். 9வது மாதம் என மாதம் 4 ஆயிரம் வீதம்12 ஆயிரம் வழங்கப்பட்டு, பின்பு குழந்தை பிறந்ததும் பேறுகால உதவியாக 6 ஆயிரத்தை அரசு வழங்கி வருகிறது. மேலும் பேறுகாலத்தின் போது முதல் 3 மாதத்திலிருந்து ஊட்டச்சத்து மாவு வழங்கப்படுகிறது. பிரசவத்திற்குப் பிறகு வீடு திரும்பும் போது அவர்களுக்கு பரிசுப்பெட்டகம் ஒன்றை சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்படுகிறது .
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மாம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வாழைப்பந்தல்,தட்டச்சேரி, இருங்கூடல், மேலப்புழந்தைஉள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்திலிருந்து ஏழ்மை நிலையிலுள்ள கர்ப்பிணி பெண்கள் மாதந்தோறும் சுகாதார நிலையம் வந்து பேறுகால பரிசோதனை செய்து வரும் நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை மற்றும் ஊட்டச்சத்து மாவு உள்ளிட்டவற்றை வழங்குவது கிடையாது
மேலும் பிரசவத்திற்கு பிறகு வழங்கப்படும் தொகை மற்றும் பரிசு பெட்டகம் உட்பட எந்த வித உதவிகளையும் மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்படாமல் ஏமாற்றி வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகளிடம் பலமுறை புகார்அளித்து வந்துள்ளனர்.
எனவே இது குறித்து உரிய நடவடிக்கையை எடுத்து ஏழ்மை நிலையில் மாம்பாக்கம் சுகாதாரம் நிலையம் வரும் கர்ப்பிணி பெண்களுக்கு மற்ற நிலையங்களில் வழங்கப்படுவது போல அனைத்து நல உதவிகளையும் வழங்கிட கோரி மாம்பாக்கம் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu