இரத்தினகிரி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை சிறப்பு மலர் அலங்காரம்.

இரத்தினகிரி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை சிறப்பு மலர் அலங்காரம்.
X

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் பிரகாரங்கள்  மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த காட்சி

ஆற்காடு அடுத்த இரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோயில் பிரகாரங்கள் ஆடிக்கிருத்திகையையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்டது

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த இரத்தினகிரியில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும் . இக்கோயிலில் ஆண்டு தோறும் நடக்கும் ஆடிக்கிருத்திகை விழாவில் வேலூர்,இராணிப்பேட்டை மற்றும் ஆந்திர கர்நாடக மாநிலங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் காவடியை கொண்டு வந்து செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ,இந்த ஆண்டும் வழக்கம் கோயில் நிர்வாகியான இரத்தினகிரி பாலமுருகனடிமை சாமியார் தலைமையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதில், கோயில் மூலவர் சுற்று பிரகாரம் முழுவதுமாக பக்தர்கள் வியக்கும் விதமாக பிரமாண்டமாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டது .


மேலும்,காலையிலிருந்து மூலவரான வள்ளி தெய்வானை சமேதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து இராஜ அலங்காரம் செய்யப்பட்டது

பின்னர்,சாமியார் பாலமுருகனடிமை தலைமையில் அர்ச்சனைகள்மற்றும் ஆராதனைகள் நடந்தது ஆயினும், மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவு காரணமாக கோயில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது .திருவிழாவைக் காணவும், சாமி தரிசனம் செய்யவும் பொதுமக்கள் கோயிலருகே வந்தனர். ஆனால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் ஏமாற்றமடைந்து வேதனையடைந்து திரும்பிச் சென்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!