/* */

கலவை நியாய விலைக்கடையில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலவையருகே நியாயவிலைக் கடைக்குச் சென்று ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

கலவை நியாய விலைக்கடையில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
X

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலவையருகே நியாயவிலைக் கடைக்குச் சென்று ஆய்வு செய்தார்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் கொரோனா நிவாரணமாக அரிசி, மற்றும் மளிகைத் தொகுப்பாக பருப்பு,சர்க்கரை எண்ணெய் உள்ளிட்ட 14 பொருட்களைக் கொண்ட தொகுப்பு பைகள், நியாயவிலைக் கடையின் மூலமாக மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது .

அவ்வாறு வழங்கப்படும் பைகளில் சில பொருட்களை விற்பனையாளர்கள் குறைத்துத் தருவதாக மாவட்டத்தில் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் இம்மாதிரியான புகாரின் பேரில் கைத்தறிமற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி நியாய விலைக்கடைகளில் குறிப்பிட்டபடி தொகுப்பு பையில் பொருட்கள் இல்லை என்றால் அப்பைகளை விற்பனையாளரிடமே திருப்பித்தந்துவிடும்படி பொதுமக்களுக்கு அறிவிப்பினை அறிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலவையருகே கணியனூர் கிராமப்பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்று ஆய்வு செய்தார்.ஆய்வில் கலெக்டர் விற்பனையாளரிடம் தொகுப்பு பையில் வழங்கப்படும் பொருட்களின் விபரம், அளவு ஆகியவற்றைக் கேட்டார். பின்னர் கடையினை முழுவதும் சுற்றிப் பார்த்துச்சென்றார்.

அவரது ஆய்வின் போது கலவைத் தாசில்தார் வட்டவழங்கல் அலுவலர்,வருவாய் ஆய்வாளர்,மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 23 Jun 2021 3:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  9. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்