/* */

தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களை கடையில் பதுக்கி விற்ற வாலிபர் கைது

ஆற்காட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் பதுக்கி விற்பனை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களை  கடையில் பதுக்கி விற்ற வாலிபர் கைது
X

ஆற்காட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களை கடையில் பதுக்கி விற்ற வாலிபர் கைது

இராணிப்பேட்டை மாவட்டம. ,ஆற்காடு கலவை ரோட் , பஜாரில் உள்ள ஜஸ்வந்த் (27) என்பவர் ,அவரது கடையில் பான் மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துவருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், ஆற்காடு டவுன் எஸ்ஐ மகாராஜாமற்றும் போலீஸார் திடிரென ஜஸ்வந்தின் கடைக்குள் நுழைந்து சோதனையிட்டனர்.

அப்போது,ஜஸ்வந்த் பதுக்கி வைத்திருந்த பான் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களை பறிமுதல் செய்து ஜஸ்வந்தை கைது செய்தனர். மேலும் அவருக்கு யாரிடமிருந்து சப்ளை வருகிறது என்பது குறித்தும் ஜஸ்வந்திடம் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 22 July 2021 11:38 AM GMT

Related News