/* */

ஆற்காடு அடுத்த மேலகுப்பம் முனீஸ்வரர் கோயிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது

ஆற்காடு அடுத்த மேலகுப்பம் முனீஸ்வரர் கோயிலில் ஆடிமாத இரண்டாவது ஞாயிற்றுகிழமை நடைபெறும் ஆடித்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

HIGHLIGHTS

ஆற்காடு அடுத்த மேலகுப்பம் முனீஸ்வரர் கோயிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது
X

மேலகுப்பம் முனீஸ்வரர் கோயிலில் ஆடித்திருவிழா

இராணிப்பேட்டை அடுத்த மேலக்குப்பத்தில் முனீஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலில்,ஆண்டுதோறும் சுற்றியுள்ள மக்கள் ஆடி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.

.அதனை தொடர்ந்து, இந்த ஆண்டும் கிராம மக்கள் ஊரணி பொங்கல் வைக்க மேல தாலங்களுடன் ஊர்வலமாக சென்று கோயில் அருகே பொங்கல் வைத்தனர். அப்போது முனிஸ்வர்ருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது ..

பின்னர் ,முனீஸ்வரர் விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார் . அச்சமயம், கிராம மக்கள் தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தி முனீஸ்வரரை பக்தியுடன் வழிபட்டனர். விழாவில் ,இலவந்தோப்பு இளைஞர்களால் அன்னதானம் வழங்கப்பட்டது.

.இரவு., தெருகூத்து நாடகத்துக்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது. விழாவில் மேலக்குப்பம் சுற்றியுள்ள கிராம மக்கள் முனீஸ்வரர் வழிபட்டனர். மேலும், விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டாமை மற்றும் ஊர் மக்கள் செய்தனர்..

Updated On: 25 July 2021 11:21 AM GMT

Related News